2 குளங்கள் தூர்வாரும் பணி


2 குளங்கள் தூர்வாரும் பணி
x

புதுவை கருவடிக்குப்பத்தில் 2 குளங்கள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கருவடிக்குப்பம்,

புதுச்சேரியில் கருவடிக்குப்பத்தில் காவல்நிலையத்துக்கு எதிரே விநாயகர் கோவில் குளம் உள்ளது. காலாப்பட்டு, லாஸ்பேட்டை என இரு தொகுதிக்கும் இடையே இந்த குளம் உள்ளது. இந்த குளத்தில் சில ஆக்கிரமிப்புகள் இருந்தன. முதல் கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த குளம் தூர்வாரப்பட்டது. தொடர்ந்து எம்.எல்.ஏ., எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி, மத்திய அரசின் நிதி ரூ.85 லட்சம் செலவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் 30 அடி ஆழம் உள்ள குளமாக இது மாறியுள்ளது. இந்த பணிகளை எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதே போல் கருவடிக்குப்பம் ஜெயராம் கார்டன் பகுதியில் உள்ள குளம் கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. இந்த குளம் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ரூ.90 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் குளத்தை சுற்றி சோலார் விளக்குகள், நடைபாதை, அமரும் இருக்கைகள், மழைநீர் சேகரிப்பு பைப்புகள், மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story