பிராவடையனாற்றில் முகத்துவாரம் தூர்வாரும் பணி


பிராவடையனாற்றில் முகத்துவாரம் தூர்வாரும் பணி
x

கோட்டுச்சேரியில் உலக நதிகள் தினத்தை முன்னிட்டு பிராவடையனாற்றில் முகத்துவாரம் தூர்வாரும் பணி தொடங்கியது.

கோட்டுச்சேரி

திரு-பட்டினம் கொம்யூன் வாஞ்சூர் அருகே பிராவடையனாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மேற்கு கரை பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆறு கடலில் கலக்கும் பகுதியான முகத்துவாரம் தூர்ந்துபோய் இருப்பதால் காவிரி நீர் வரும்போதும், பருவமழை பெய்யும் காலத்திலும் தண்ணீர் கடலில் வடியாமல், அருகில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து விடுவதாக விவசாயிகள் புகார் கூறி வந்தனர்.

இந்தநிலையில் உலக நதிகள் தினத்தை முன்னிட்டு துறைமுக சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஆற்றுமுகத்துவாரம் தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துறைமுக அதிகாரிகள், வாஞ்சூர் பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story