ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகள்


ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகள்
x

மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்

திருக்கனூர்

மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட காட்டேரிக்குப்பம் இருளர் குடியிருப்பு பகுதியில் ரூ.44.70 லட்சம் செலவில் ராஜாங்க குளக்கரையில் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை அமைத்து மேம்படுத்தும் பணியும், சுத்துக்கேணி காலனியில் ரூ.54.96 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சிமெண்டு சாலையும், அதே பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி வீதியில் ரூ.9.97 லட்சம் செலவில் சிமெண்டு சாலையும், வாதானூர் காலனி பகுதியில் ரூ.37.86 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடக்கிறது. இந்த பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கே.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கான்பெட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட தீபாவளி சிறப்பு அங்காடியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story