சேதமடைந்த பிளாஸ்டிக் தடுப்புகள்


சேதமடைந்த பிளாஸ்டிக் தடுப்புகள்
x

புதுச்சேரி - கடலூர் சாலையில் பிளாஸ்டிக் தடுப்புகள் சேதமடைந்தன.

அரியாங்குப்பம்

புதுச்சேரி - கடலூர் சாலையில் ஏற்படும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் சாலையின் நடுவில் இரும்பினால் ஆன தடுப்புகள், சிமெண்டு கட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் தடுப்புகள் வைத்துள்ளனர். இதில் அரியாங்குப்பத்தில் இருந்து முள்ளோடை வரை சாலையின் நடுவே முக்கிய இடங்களில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தடுப்புகளால் விபத்துக்கள் குறைந்தன.

இந்தநிலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடுப்புகள் தற்போது சேதம் அடைந்து காட்சியளிக்கின்றன. சாலையில் செல்லும் வாகனங்கள் மோதியதில் பிளாஸ்டிக் தடுப்புகள் சாலையோடு சாலையாக அமுக்கிபோய் உள்ளது. இதனால் மீண்டும் விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே சேதமடைந்த பிளாஸ்டிக் தடுப்புகளை அகற்றிவிட்டு, புதிதாக தடுப்புகள் அமைக்க போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story