அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி


அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி
x

குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி

புதுவை ராஜ்பவன் தொகுதி குமரகுருபள்ளத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அவற்றை இடித்துவிட்டு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கியுள்ளன. இந்த பணிகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் இன்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, பொதுப்பணித்துறை செயலாளர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பணிகளை விரைவாக மேற்கொள்ள அமைச்சர் லட்சுமிநாராயணன் கேட்டுக்கொண்டார். இந்த அடுக்குமாடி குடியிருப்பு 2 கட்டிடங்களாக 216 வீடுகள் மற்றும் 12 மாடிகளை கொண்டதாக அமைய உள்ளது. இதற்காக ரூ.45 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story