அரசுப் பள்ளி மாடியில் காண்டம் பாக்கெட்டுகள்
காலாப்பட்டு அரசுப்பள்ளி மொட்டை மாடியில் காண்டம் பாக்கெட்டுகள் கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காலாப்பட்டு
காலாப்பட்டு அரசுப்பள்ளி மொட்டை மாடியில் காண்டம் பாக்கெட்டுகள் கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காண்டம் பாக்கெட்டுகள்
காலாப்பட்டில் செவாலியே செல்லான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு காலாப்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 10 ஆசிரியர்கள், 2 ஆசிரியையகள் பணியாற்றுகின்றனர்.
இந்த பள்ளியில் நேற்று ஸ்மார்ட் போர்டு திறப்பு விழா நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கல்வித்துறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த பள்ளியின் 2-வது தளத்தின் மொட்டை மாடியில் காண்டம் பாக்கெட்டுகள் கிடந்தன. இதை பார்த்த அதிகாரிகள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாடியில் இரும்பு கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில் காண்டம் பாக்கெட்டுகள் எப்படி வந்தது என்று தெரியாமல் ஆசிரியர்கள் குழம்பினர்.
போலீஸ் விசாரணை
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் காலாப்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் இன்று பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளியில் வெளிநபர்கள் நுழைய வாய்ப்பு இல்லை. அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து யாரோ பள்ளியின் மொட்டை மாடியில் காண்டம் பாக்கெட்டுகளை வீசி இருக்கலாம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பள்ளி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்ற போலீசார், அங்குள்ளவர்களிடம் விசாரித்து, இனிமேல் இதுபோன்று யாரும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
அரசுப்பள்ளி மொட்டை மாடியில் காண்டம் பாக்கெட்டுகள் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.