சோதனை ஓட்டமாக சரக்கு கப்பல் வருகை


சோதனை ஓட்டமாக சரக்கு கப்பல் வருகை
x

புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் சோதனை ஓட்டமாக சரக்கு கப்பல் வந்துள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் சோதனை ஓட்டமாக சரக்கு கப்பல் வந்துள்ளது.

இடநெருக்கடி

சென்னை துறைமுகத்தில் இடநெருக்கடி காரணமாக, வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் வரும் கண்டெய்னர்களை வந்து இறக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே புதுச்சேரி துறைமுகத்தில் கண்டெய்னர்களை இறக்கி பிறபகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதயை புதுவை அரசு வழங்கியது.

இதற்காக புதுச்சேரி உப்பளம் துறைமுகம் யார்டு பகுதி தூர்வாரப்பட்டு, சரக்கு குடோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த குடோன்கள் சுங்கவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கண்டெய்னர்களை ஏற்றி செல்லும் லாரிகள் நிற்பதற்கான இடம், டிரைவர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சோதனை ஓட்டம்

இதற்கிடையே சென்னை துறைமுகம் அல்லது எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 12 டன் எடை கொண்ட 50 முதல் 100 வரை கண்டெய்னர்களை சரக்கு கப்பல் மூலம் கடல் வழியாக புதுச்சேரி உப்பளம் துறை முகத்திற்கு கொண்டு வந்து இறங்கி அனுப்பி வைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதற்கான சோதனை ஓட்டமாக கொல்லத்தில் இருந்து கடந்த 6-ந் தேதி புறப்பட்ட கண்டெய்னர் சரக்கு கப்பல் இன்று காலை புதுவை உப்பளம் துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பலில் 60 முதல் 70 கண்டெய்னர்கள் தேக்கி வைக்கும் வசதி கொண்டது. இந்த கப்பல் புதுவையில் இருந்து சென்னை புறப்பட்டு அங்கிருந்து கண்டெய்னர்களை ஏற்றி வந்து பிற பகுதிகளுக்கு அனுப்பபடுகின்றன.

இந்த சரக்கு கப்பல் சேவை விரைவில் தொடங்க உள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story