ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா
சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பணிநிரந்தரம், நிலுவை சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமையில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்களிடம் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story