அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி?


அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி?
x

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு தடை

புதுவை கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். பாடப்பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ ஆணையம் அனுமதி மறுத்தது. கண்காணிப்பு கேமரா வசதியில்லாமை, ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை செயல்படுத்தாதது ஆகியவற்றை காரணம் காட்டி மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை புதுவை மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறஉடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார். மருத்துவக்கல்லூரியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் உடனடி ஆய்வு மேற்கொண்டார்.

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தநிலையில் கல்லூரியில் குறைகள் சரிசெய்யப்பட்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக்கோரி ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்திலும் 3 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவற்றுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் புதுவை அரசு மருத்துவக்கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று புதுவை மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மருத்துவ ஆணைய அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ தகவல் வரவில்லை. ஆனால் அனுமதி கிடைத்துவிடும் என்று நம்புவதாக தெரிவித்தனர்.


Next Story