751 குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான அடையாள அட்டை


751 குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான அடையாள அட்டை
x

அரியாங்குப்பத்தில் 751 குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான அடையாள அட்டையை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்னினார்.

அரியாங்குப்பம்

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 751 குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமை தாங்கினார். பா.ஜ.க. அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக சமூக நலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக காமராஜ் வரவேற்றார். இதில் தொகுதி முக்கிய பிரமுகர்கள் வாழுமுனி, ராமபுத்திரன், சங்கர், ஆதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பச்சையப்பன் நன்றி கூறினார்


Next Story