600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

புதுவையில் தடை செய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி

புதுவையில் தடை செய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மொத்த விற்பனை

புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை ஆங்காங்கே நடந்து வருகிறது. இத்தகைய பொருட்களை உற்பத்தி செய்த 40-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மாசு கட்டுப்பாட்டு குழுமம் மூடியுள்ளது. பல தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான கேரிபேக், கப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில் அறிவியல் அதிகாரி செல்வநாயகி, திட்ட உதவியாளர் விமல்ராஜ், புதுவை நகராட்சி வருவாய் ஆய்வாளர் இளங்கோ அடங்கிய குழுவினர் புதுவை வெள்ளாழ வீதியில் இயங்கி வந்த பவன் ஏஜென்சியில் சோதனை நடத்தினர்.

600 கிலோ பறிமுதல்

அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருட்கள் 500 கிலோ இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் மாதாஜி ஏஜென்சி என்ற கடையில் 100 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இனிமேல் இதுபோன்று விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story