தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5-வது சட்ட தொகுப்பு புத்தகம்


தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5-வது சட்ட தொகுப்பு புத்தகம்
x

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5-வது சட்ட தொகுப்பு புத்தகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

புதுச்சேரி

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5-வது சட்ட தொகுப்பு புத்தகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

மொழிபெயர்ப்பு

புதுவை அரசின் சட்டத்துறையானது 1954 முதல் 2020 ஆண்டு வரையிலான புதுவை வரலாற்று சட்ட ஆவணங்கள் மற்றும் புதுவை சட்டசபையில் இயற்றப்பட்ட சட்டங்களை காலவரிசைப்படி தொகுத்து புதுச்சேரி சட்டத்தொகுப்பு என்னும் தலைப்பில் 5 தொகுப்புகளாக ஆங்கிலத்தில் வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து சட்ட, நிர்வாக மொழிபெயர்ப்புக்கு தேவையான சட்ட ஆட்சிய சொற்களஞ்சியம் என்ற அகராதியையும் தயாரித்து வெளியிட்டது.

இதனை பயன்படுத்தி ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து வருகிறது. முதல் கட்டமாக 4 தொகுப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு ஏற்கனவே வெளியிடப்பட்டது. தற்போது 5-வது தொகுப்பு தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.

ரங்கசாமி வெளியிட்டார்

புதுவை சட்டசபையின் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் நடந்த நிகழ்ச்சியில் சட்டத்தொகுப்பினை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை நீதிபதி செல்வநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து மொழியாக்கம் செய்த மொழி பெயர்ப்பாளர் சேகரை முதல்-அமைச்சர் ரங்கசாமி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார், தலைமை குற்றவியல் நீதிபதி மோகன், நீதிபதிகள் இளவரசன், சோபனாதேவி, வக்கீல் சங்க தலைவர் குமரன், சட்ட மொழி பெயர்ப்பாளர் சுந்தரமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story