அரசுக்கு ரூ.5.64 கோடி ஈவுத்தொகை
காரைக்கால் மின்திறல் வரைநிலை கழகம் சார்பில் லாப ஈவுத்தொகையாக ரூ.5.64 கோடி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி
காரைக்கால் மின்திறல் வரைநிலை கழகம் சார்பில் லாப ஈவுத்தொகையாக ரூ.5.64 கோடி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கப்பட்டது.
மின்திறல் வரைநிலை கழகம்
காரைக்காலில் மின்திறல் வரைநிலைக்கழகம் 32.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு தேவையான எரிவாயு கெயில் நிறுவனத்துடன் மேற்கொண்ட உடன்பாட்டின்படி காவிரிப்படுகை நரிமணத்திலுள்ள எரிவாயு கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது.
இந்த மின்திறல் கழகத்தின் மூலம் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக லாபத்தை ஈட்டிக்கொண்டுள்ளது. லாபத்தில் 50 சதவீத தொகை அரசுக்கு ஈவுத்தொகையாக வழங்கப்படுகிறது.
ரூ.5.64 கோடி ஈவுத்தொகை
அதன்படி கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான ஈவுத்தொகையாக அரசுக்கு ரூ.5.64 கோடி கிடைத்துள்ளது. இந்த தொகையை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசு செயலாளர் முத்தம்மா ஆகியோர் வழங்கினார்கள்.
அப்போது அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். மின்திறல் கழகம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.45.31 கோடி லாப ஈவுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.