கல்லூரி மாணவரை கொல்ல முயன்ற 4 பேர் கைது


கல்லூரி மாணவரை கொல்ல முயன்ற 4 பேர் கைது
x

புதுச்சேரியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மோதல்

லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியின் அரசு பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் இருவருக்கு இடையே கடந்த 18-ந் தேதி தகராறு ஏற்பட்டது. இதுபற்றி பிளஸ்-1 மாணவனின் சகோதரர் சந்தானராஜ் தட்டிகேட்டபோது பிளஸ்-2 மாணவனின் நண்பர்கள் அவரை தாக்கினர். இதையடுத்து சந்தானராஜ் தனது நண்பர்கள் 10 பேருடன் சாரம் பகுதியில் வசித்து வந்த பிளஸ்-2 மாணவன் அவரது நண்பர்களுடன் இருந்தபோது மோதலில் ஈடுபட்டனர்.

இதில் சந்தானராஜின் நண்பரான கல்லூரி மாணவர் திருமலையை (வயது18) எதிர்தரப்பினர் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்த சக்தி (19), ஆகாஷ் (20), மகேந்திரன் (22), சுபாஷ் (19) ஆகியோர் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்தி, ஆகாஷ், மகேந்திரன், சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோஸ், பெரியசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story