உத்தரபிரதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்: போலீஸ் தடியடியால் பரபரப்பு


உத்தரபிரதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்: போலீஸ் தடியடியால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Nov 2024 10:33 AM (Updated: 11 Nov 2024 12:00 PM)
t-max-icont-min-icon

எச்சரிக்கையை மீறி திரண்ட இளைஞர்கள் மீது உத்தரபிரதேச போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

லக்னோ,

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் பி.சி.எஸ் (Provincial Civil Service) மற்றும் ஆய்வு அதிகாரி தேர்வுகளை ஒரே நாளில் நடத்த வலியுறுத்தியும், தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கக்கோரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எச்சரிக்கையை மீறி திரண்ட இளைஞர்கள் மீது உத்தரபிரதேச போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த சம்பவத்திற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இளைஞர்களுக்கு எதிரான பாஜகவினர் நடத்திய தடியடி வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். அலகாபாத்தில் யுபிபிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கக்கோரி இளைஞர்கள் கோரிக்கைகளை எழுப்பியபோது, ஊழல் நிறைந்த பாஜக அரசு வன்முறையில் இறங்கியது. நாங்கள் இளைஞர்களுடன் இருக்கிறோம். பாஜக ஆட்சி வேண்டாம் என்கின்றனர் இன்றைய இளைஞர்கள்! என்று பதிவிட்டுள்ளார்.


Next Story