ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி


ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
x

பூர்ணிமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஐகோர்ட்டு உள்ளது. இந்த ஐகோர்ட்டில் இன்று வழக்கமான பணிகள் நடைபெற்று வந்தன. அதில், வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தை சேர்ந்த 3 பெண்கள் தாக்கல் செய்த மனு விசாரணை நடைபெற்றது.

கூட்டுறவு சங்கத்தில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் உறுப்பினர்களான தங்கள் பெயர்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இந்த தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரியும் பூர்ணிமா ஹல்டர், சுஷ்டினா, வந்தனா நஸ்கர் ஆகிய 3 பெண்களும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென பூர்ணிமா தான் கொண்டுவந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள், போலீசார், பூர்ணிமாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story