எக்ஸ்பிரஸ் ரெயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் பயணியிடம் அத்துமீறிய ரெயில்வே போலீஸ் - அதிர்ச்சி சம்பவம்

ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
லக்னோ,
தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் இடையே பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு கடந்த 14ம் தேதி பெண் பயணி பயணித்துள்ளார்.
பெண் பயணி தான் முன்பதிவு செய்த இருக்கையில் இரவு பயணத்தின்போது உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த ரெயிலில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தா பெண் பயணியிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி கூச்சலிட்டுள்ளார். மேலும், போலீஸ் கான்ஸ்டபிளை கண்டித்து அவரை வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து, கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தா பெண் பயணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தா மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.






