அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் கொள்முதல்; பேச்சுவார்த்தை நிறுத்தமா? - மத்திய அரசு விளக்கம்

ராணுவ தளவாட கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
புதுடெல்லி,
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. இது இரு நாட்டு உறவில் பெரும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, அந்த நாட்டுடன் நடந்து வரும் ராணுவ தளவாட கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தன.
ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை என ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும் அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாட கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைகளின் படி நடந்து வருவதாகவும் தெளிவுபடுத்தி உள்ளன.
Related Tags :
Next Story






