‘பல் இல்லாத சட்டத்தால் என்ன பயன்?’ - மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு

மருந்து நிறுவனங்கள் தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,
மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு இலவச பொருட்களை வழங்கும் மருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். அப்போது, பல் இல்லாத சட்டத்தால் என்ன பயன்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Related Tags :
Next Story






