பயிற்சியின்போது 270 கிலோ எடை கழுத்தில் விழுந்து பளுதூக்குதல் வீராங்கனை உயிரிழப்பு


பயிற்சியின்போது 270 கிலோ எடை கழுத்தில் விழுந்து பளுதூக்குதல் வீராங்கனை உயிரிழப்பு
x
தினத்தந்தி 19 Feb 2025 6:06 PM IST (Updated: 19 Feb 2025 6:12 PM IST)
t-max-icont-min-icon

பயிற்சியின்போது 270 கிலோ எடை கழுத்தில் விழுந்து பளுதூக்குதல் வீராங்கனை உயிரிழந்தார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பைகானேர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது பளுதூக்குதல் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சாரியா, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில், யாஷ்டிகா இன்று வழக்கம்போல் உடற்பயிற்சி கூடத்தில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் பயிற்சியாளரும் உடன் இருந்தார். சுமார் 270 கிலோ எடையை தூக்குவதற்கான பயிற்சியை யாஷ்டிகா மேற்கொண்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக எடை அவரது கழுத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் யாஷ்டிகாவின் கழுத்து எலும்பு முறிந்தது. அவரை காப்பாற்ற முயன்ற பயிற்சியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக யாஷ்டிகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த யாஷ்டிகாவின் குடும்பத்தினர் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை எனவும், பிரேத பரிசோதனைக்கு பிறகு யாஷ்டிகாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story