மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்-மம்தா பானர்ஜி

வக்பு திருத்தச் சட்டத்தை மாநில அரசு உருவாக்கவில்லை. மத்திய அரசுதான் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் எனது உண்மையான வேண்டுகோள், தயவுசெய்து அமைதியாக இருங்கள், நிதானமாக இருங்கள். மதத்தின் பெயரால் எந்த வன்முறையிலும் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது. அரசியலுக்காக கலவரத்தைத் தூண்ட வேண்டாம். கலவரத்தைத் தூண்டுபவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வக்பு திருத்தச் சட்டத்தை மாநில அரசு உருவாக்கவில்லை. மத்திய அரசுதான் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்"இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.