தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜயா கிஷோர் ரகத்கார் நியமனம்


தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜயா கிஷோர் ரகத்கார் நியமனம்
x

தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய உறுப்பினராக, டாக்டர் அர்ச்சனா மஜும்தார் அதிகாரப்பூர்வ முறையில் நியமிக்கப்படுகிறார்.

புதுடெல்லி,

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜயா கிஷோர் ரகத்கார் என்பவரை மத்திய அரசு நியமித்து உள்ளது. இதுபற்றி அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், தேசிய மகளிர் ஆணைய சட்டம் 1990-ன், பிரிவு 3-ன் கீழ் நடைபெறும் இந்த நியமனத்தின்படி, 3 ஆண்டுகளுக்கு அல்லது 65 வயது ஆகும் வரை, இவற்றில் எது முதலில் வருகிறதோ, அதுவரையிலான காலஅளவுக்கு இந்த நியமனம் செல்லுபடியாகும்.

இந்த நியமனத்தின்படி, ரகத்காரின் பதவி காலம் உடனடியாக தொடங்குகிறது. இதுபற்றிய அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும். இதுதவிர, தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய உறுப்பினர்களின் பெயர்களையும் அரசு அறிவித்து உள்ளது.

இதன்படி, டாக்டர் அர்ச்சனா மஜும்தார் அதிகாரப்பூர்வ முறையில் புதிய உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் என மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சிக்கான அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு தெரிவிக்கின்றது. அவர் 3 ஆண்டு காலம் பதவியில் நீடித்திடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story