வியட்நாம் கடலோர காவல்படை கப்பல் 16-ந்தேதி கொச்சி வருகை
வியட்நாம் கடலோர காவல்படை கப்பல் வரும் 16-ந்தேதி கேரளாவிற்கு வருகை தர உள்ளது.
புதுடெல்லி,
வியநாம் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கடலோர காவல்படை கப்பல் 'சி.பி.எஸ். 8005', 4 நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு வர உள்ளது. இதன்படி இந்த கப்பல் வரும் 16-ந்தேதி கேரள மாநிலத்தின் கொச்சி நகருக்கு வருகை தருகிறது. இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், வியட்நாம் கடலோர காவல்படை கப்பல் வருகையின்போது, இருநாட்டு கடற்படை வீரர்களிடையே தொழில்முறை சார்ந்த உரையாடல்கள் நடைபெறும் என்றும், கடல்சார் தேடல் மற்றும் மீட்புப்பணி, கடல்சார் சட்ட அமலாக்கம், கடல்சார் மாசு கட்டுப்பாடு ஆகியவை தொடர்பான பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story