உத்தர பிரதேசம்: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையில் இருந்து தீயை கட்டுப்படுத்தவும், அப்பகுதியை பாதுகாக்கவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
நொய்டா,
உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாக போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையில் இருந்து தீயை கட்டுப்படுத்தவும், அப்பகுதியை பாதுகாக்கவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நொய்டா காவல்துறை துணை ஆணையர் கூறுகையில்;-
இன்று அதிகாலை 3.25 மணியளவில் ஸ்ரீ பாங்கே பிஹாரி அரோமேட்டிக்ஸ் என்ற ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது . இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 32 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தில் இதுவரை எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.