உத்தர பிரதேசம்: தங்கையை அடித்துக்கொன்ற சிறுவன்

சிறுவன் செங்கல் மற்றும் குச்சியால் தங்கையை அடித்துக்கொன்ற சம்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ரெஹுவா மன்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமானந்த் மிஸ்ரா . இவருக்கு 10 வயதில் ஒரு பேரனும் ஒரு வயதில் பேத்தியும் இருந்தனர்.
இந்நிலையில் 10 வயது சிறுவன் நேற்று தனது தங்கையை செங்கல் மற்றும் குச்சிகளால் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மிஸ்ரா சிறுமி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. சிறுவன் தனது தங்கையை செங்கள் மற்றும் குச்சியால் முகத்தில் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






