உத்தரபிரதேசம்: போலீஸ் என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொலை

உத்தரபிரதேசத்தில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் இன்று அதிகாலை சிறப்பு போலீசாருக்கும் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 4 பேருக்கும் இடையே துப்பாக்கி சூடு வெடித்தது.
இந்த என்கவுன்டரில் முஸ்தபா கக்கா கும்பலை சேர்ந்த அர்ஷத், மஞ்ஜீத், சதீஷ் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் என மொத்தம் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த காவல்துறை ஆய்வாளர் சுனில் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த கும்பலின் உறுப்பினர்களில் ஒருவரான அர்ஷத் ஒரு கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாவார். மேலும் அவரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதியை போலீசார் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story