சத்ரபதி சிவாஜியை மத்திய மந்திரி அமித்ஷா அவமதித்துள்ளார் - சஞ்சய் ராவத் எம்.பி. குற்றச்சாட்டு


சத்ரபதி சிவாஜியை மத்திய மந்திரி அமித்ஷா அவமதித்துள்ளார் - சஞ்சய் ராவத் எம்.பி. குற்றச்சாட்டு
x

அமித்ஷா சத்ரபதி சிவாஜியை, ‘சிவாஜி மகாராஜ்’ என்று அழைக்கவில்லை என சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அண்மையில் மராட்டிய மாநிலம் ராய்காட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வீரத்தை பாராட்டி பேசி இருந்தார்.

இந்த நிலையில் அமித்ஷா மாமன்னர் சத்ரபதி சிவாஜியை அவமதித்ததாக உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

"மத்திய மந்திரி அமித்ஷா தனது பேச்சின்போது மாமன்னர் சத்ரபதி சிவாஜியை, சிவாஜி மகாராஜ் என்று அழைக்கவில்லை. அவரது முதல் பெயரை கூறியே அழைத்தார். அதேநேரம் முகலாய மன்னர் அவுரங்சீப்பின் கல்லறையை "சமாதி" என்று கூறுகிறார்.

இதுதான் உங்களுடைய மொழியா? இது சிவாஜி மகாராஜை அவமதிப்பதாகும். இதை பார்த்துக்கொண்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் என்ன செய்துகொண்டு இருக்கிறார். அவர் மிகவும் மதிக்கப்படும் மராட்டிய மன்னரை அவமதித்ததற்காக அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story