வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
டெல்லி,
Live Updates
- 23 July 2024 11:26 AM IST
நடப்பு பட்ஜெட்டில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகரப்புற வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
- 23 July 2024 11:23 AM IST
இந்திய பொருளாதாரம் வளர்கிறது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது. நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து நிலைத்தன்மையுடனும், 4 சதவீதம் என்ற இலக்கை நோக்கியும் பயணிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ச்சிக்கு நடப்பு பட்ஜெட்டில் 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
- 23 July 2024 11:14 AM IST
சர்வதேச பொருளாதாரம் தொடர்ந்து கொள்கை நிலைத்தன்மையின்றி உள்ளது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
- 23 July 2024 11:13 AM IST
பா.ஜ.க.வின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்காக மக்களுக்கு நன்றி; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடக்க உரை
- 23 July 2024 11:11 AM IST
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது இந்திய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் 3வது முறையாக மீண்டும் ஆட்சியமைத்துள்ளோம் - நிர்மலா சீதாராமன்
- 23 July 2024 11:06 AM IST
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைக்கும் வகையில், எங்களுடைய கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
- 23 July 2024 11:06 AM IST
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களை அவர் வாசித்து வருகிறார்.
- 23 July 2024 11:03 AM IST
சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சத்தா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.க்கள், மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை எழுப்பி, நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 23 July 2024 10:52 AM IST
பிரதமர் மோடியின் 3-வது பதவி காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டை முன்னிட்டு, மத்திய பட்ஜெட் 2024-க்கான நகல்கள் நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்து உள்ளன.