வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
டெல்லி,
Live Updates
- 23 July 2024 12:16 PM IST
பெண்கள், சிறுமிகளுக்கு நலத்திட்டங்கள்
பெண்கள், சிறுமிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
- 23 July 2024 12:09 PM IST
ஆந்திராவுக்கு சிறப்பு நிதி
ஆந்திர தலைநகர் (அமராவதி) மேம்பாட்டிற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- 23 July 2024 12:00 PM IST
பீகாரில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 26 ஆயிரம் கோடி - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
பீகாரில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 26 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- 23 July 2024 11:57 AM IST
கல்விக்கடனுதவி:
உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கான கல்விக்கடனுதவி தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது
- 23 July 2024 11:55 AM IST
பணியில் உள்ள பெண்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும் - நிதி மந்திரி
தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் பணி செய்யும் பெண்களுக்கு மத்திய அரசு விடுதிகளை அமைக்கும்.
- 23 July 2024 11:52 AM IST
வேலையில் சேரும் 30 இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையாக அவர்களின் வருங்கால வைப்பு நிதியின் ஒருமாத முழு தொகையை மத்திய அரசே வழங்கும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
- 23 July 2024 11:49 AM IST
இறால் வளர்ப்பு மற்றும் சந்தைபடுத்தலுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கும். கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். கிஷான் கடன் அட்டை 5 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
- 23 July 2024 11:44 AM IST
1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் - நிர்மலா சீதாராமன்
அடுத்த 2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பருப்பு வகைகள் உற்பத்தி, சேமிப்பு, சந்தைபடுத்துவதற்கான வழிமுறைகளை அரசு வலிமைபடுத்தும். விவசாயத்துறையில் டிஜிட்டல் பொது கட்டமைப்பை ஊக்கப்படுத்த மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.