அங்கீகாரமின்றி வழங்கப்படும் பட்டப்படிப்புகள் வேலை வாய்ப்புகளுக்கு தகுதியாகாது - யு.ஜி.சி. எச்சரிக்கை


அங்கீகாரமின்றி வழங்கப்படும் பட்டப்படிப்புகள் வேலை வாய்ப்புகளுக்கு தகுதியாகாது - யு.ஜி.சி. எச்சரிக்கை
x

கோப்புப்படம் 

அங்கீகாரமின்றி உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பட்டப்படிப்புகளை கற்பிக்க பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அங்கீகாரம் பெற வேண்டும். இருப்பினும், யு.ஜி.சி.யின் சட்ட விதிகளுக்கு முரணாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளை கற்பிப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்திற்கு சென்றது.

யு.ஜி.சி.யின் அங்கீகாரமின்றி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கற்பிக்கும் பட்டப்படிப்புகள், உயர்கல்வி எனும் அங்கீகாரமற்றது. மேலும், அது, வேலை வாய்ப்பிற்கும் தகுதியாகாது என்று யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.

எனவே, உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள், யு.ஜி.சி.யின் www.ugc.gov.in என்ற இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், போலி கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.

யு.ஜி.சி. சட்ட விதிகளுக்கு முரணாக உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. அங்கீகாரமின்றி உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.


Next Story