திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் கேரள எம்.எல்.ஏ. அன்வர்
கேரள எம்.எல்.ஏ. அன்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் நிலாம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பி.வி. அன்வர். துவக்கத்தில் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் நட்புடன் இருந்தவர் அன்வர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆளும் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டார். இதனால், ஆளும் அரசை விமர்சித்து பேசி வந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் தி.மு.க.,வில் இணைவார் எனவும் தகவல் வெளியாகின. ஆனால், அது எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், அன்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். இவர், கடந்த 2016, 2021ம் ஆண்டு தேர்தல்களில் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story