விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பாயம்


விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பாயம்
x

விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை உறுதி செய்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி,

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) செயல்பாடுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை தொடர்ந்து நீடித்து வந்தது.

அந்த வகையில் கடந்த மே 14ம் தேதி விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனிடையே, விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. மேலும், விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை உறுதி செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


Next Story