'காதல் வெற்றி பெற சமூகத்தை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் தேவை' - ஆ.ராசா


காதல் வெற்றி பெற சமூகத்தை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் தேவை - ஆ.ராசா
x
தினத்தந்தி 10 Jan 2025 3:14 AM IST (Updated: 10 Jan 2025 9:32 AM IST)
t-max-icont-min-icon

காதல் வெற்றி பெற சமூகத்தை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் தேவை என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற 'காத்து வாக்குல ஒரு காதல்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் எழுத்தில் உருவான ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் சாதி ஒழிப்பு குறித்த மையக்கருத்து அடிநாதமாக இருந்திருக்கும்.

சினிமாவாக இருந்தாலும், கலையாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும், சமூகத்தில் இருக்கும் கொதிப்பை வெளியே கொண்டு வந்து அவற்றை தீர்க்கக்கூடிய ஆயுதமாக இருக்கும் இயக்கம் திராவிட இயக்கம்.

வீரம், காதல் இவையெல்லாம் தமிழரின் மாண்புகள். இன்று இருக்கக்கூடிய சாதி, அரசியல், பொருளாதாரம், மதவெறி ஆகியவற்றையெல்லாம் எதிர்த்து ஒரு காதல் வெற்றி பெற வேண்டும் என்றால் சமூகத்தை நன்றாக புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்."

இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.


Next Story