3 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை; அதிர்ச்சி சம்பவம்


3 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை; அதிர்ச்சி சம்பவம்
x

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்துள்ளனர்.

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் கீர் சோம்நாத் மாவட்டம் மோராசா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ் சவ்தா. இவருக்கு 3 வயதில் மகள் இருந்தார். இந்நிலையில் , நேற்று இரவு 9.30 மணியளவில் உணவு சாப்பிட்ட சிறுமி கை கழுவ வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை, சிறுமியை கடித்து இழுத்துக்கொண்டு சென்றது. சிறுமியை சிறுத்தை கடித்துக்கொன்று உடலை வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் வீசிவிட்டு சென்றுள்ளது.

சிறுமி மாயமானது குறித்து அறிந்த பெற்றோர் இரவு முழுவதும் தேடியுள்ளனர். பின்னர், காலை 7 மணியளவில் வீட்டின் அருகே சிறுமி சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்துள்ளனர்.

1 More update

Next Story