உத்தரபிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து


உத்தரபிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து
x

மூன்று மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

லக்னோ

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கேம்பியர்கஞ்ச் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் ராகுல் சரப் மற்றும் பங்கஜ் சரப் ஆகிய இருவருக்கும் சொந்தமான ஒரு நகைக்கடை,ஒரு துணிக்கடை மற்றும் துணிக்கிடங்கு ஆகியவை அமைந்துள்ளன.

இந்நிலையில் நேற்று மதியம் நகைக்கடையில் திடீரென தீ பிடித்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இதனிடையே தீயானது மளமளவென வேகமாக பரவதோடங்கியது. இதனால் தீயானது படுபயங்கரமாக பரவியதால் தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தை போலீசார் சோதனை செய்தனர். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயடைந்தார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் இது குறித்து கடை உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் ரூ. 25 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் முற்றிலும் சேதடைந்ததாக தெரியவந்துள்ளது.


Next Story