மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி


மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 9 Dec 2024 12:46 PM IST (Updated: 9 Dec 2024 1:47 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தயாரித்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் சிலர் காயமடைந்தனர் என்று போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மாவட்டத்தின் சாகர்பாரா கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட கொயர்தலா கிராமத்தில் நேற்று இரவு நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்தவர்கள் சர்க்கார் (32), மொல்லா (30) மற்றும் முஸ்தகின் ஷேக் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மொல்லா வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக்கொண்டிருந்த போது இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு வெடித்த இடத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் பெரும் போலீஸ் குழு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story