தேர்தலில் போட்டியிட்ட 'அம்பாசமுத்திரம் அம்பானி' பட நடிகை அதிர்ச்சி தோல்வி


தேர்தலில் போட்டியிட்ட அம்பாசமுத்திரம் அம்பானி பட நடிகை அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 4 Jun 2024 11:18 PM (Updated: 4 Jun 2024 11:25 PM)
t-max-icont-min-icon

நவ்நீத் ரானா 19 ஆயிரத்து 731 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மும்பை,

தமிழ் சினிமாவில் அம்பாசமுத்திரம் அம்பானி, அரசாங்கம் படங்களில் நடித்தவர் நவ்நீத் ரானா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு பிளவுபடாத தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்து இருந்தது.

எனினும் தேர்தலுக்கு பிறகு அவர் போலி சாதி சான்றிதழ் விவகாரத்தில் சிக்கினார். அதன்பிறகு அவர் பா.ஜனதா ஆதரவு எம்.பி. ஆனார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர் பா.ஜனதா கட்சி வேட்பாளராக அமராவதியில் போட்டியிட்டார். அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு கூட்டணி கட்சியான சிவசேனாவை சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர்.

தேர்தலில் நவ்நீத் ரானாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பஸ்வந்த் வான்கடே போட்டியிட்டார். இதில் அவரிடம் நவ்நீத் ரானா 19 ஆயிரத்து 731 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் பஸ்வந்த் வான்கடே 5 லட்சத்து 26 ஆயிரத்து 271 வாக்கு பெற்றார். நவ்நீத் ரானா 5 லட்சத்து 6 ஆயிரத்து 540 வாக்குகளை பெற்று இருந்தார்.

1 More update

Next Story