இந்தியாவில் முதல் மின்சார காரை டெலிவரி செய்தது டெஸ்லா நிறுவனம்

மராட்டிய போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக், தனது வெள்ளை நிற காரை டெலிவரி எடுத்தார்.
மும்பை,
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ள டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை டெலிவரி செய்துள்ளது. மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள ஷோரூமிலிருந்து, மராட்டிய போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக், தனது வெள்ளை நிற (Y) மாடல் காரை டெலிவரி எடுத்தார்.
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை டெலிவரி பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும், பெருமையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டுக்குள் 350 முதல் 500 கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா காரின் RWD மாடல் விலை ரூ.59.89 லட்சத்திலும், லாங் ரேஞ்ச் RWD மாடல் விலை ரூ.67.89 லட்சத்திலும் தொடங்குகிறது.
Related Tags :
Next Story






