வணிக வளாகத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவன் தற்கொலை


வணிக வளாகத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவன் தற்கொலை
x

வணிக வளாகத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து பிளஸ் 2 மாணவன் தற்கொலை செய்துகொண்டான்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் மொகாலியை சேர்ந்த சிறுவன் அபுஜித். 17 வயதான சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தான்.

இந்நிலையில், சிறுவன் அபுஜித் நேற்று காலை 7.15 மணிக்கு அப்பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றான். காலை நேரம் என்பதால் வணிக வளாகம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அங்குள்ள ஒரு கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கிய சிறுவன் வணிக வளாகத்தின் 4வது மாடிக்கு சென்றுள்ளான்.

அப்போது, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற சிறுவன் 4வது மாடியில் இருந்து கிழே குதித்துள்ளான்.இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிறுவன் அபுஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபுஜித் கடந்த சில நாட்களாக யாரிடமும் சரிவர பேசாமல், மன உளைச்சலில் இருந்ததாக சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story