புதுச்சேரி, காரைக்காலில் பிப்.11-ம்தேதி மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு


புதுச்சேரி, காரைக்காலில் பிப்.11-ம்தேதி மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு
x
தினத்தந்தி 6 Feb 2025 4:14 PM (Updated: 7 Feb 2025 6:12 AM)
t-max-icont-min-icon

பிப்.11-ல் அனைத்து மதுபான கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது.

புதுச்சேரி,

புதுச்சேரி, காரைக்காலில் வரும் 11-ம் தேதி மதுபானக் கடை மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி வரும் 11-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்து,டாஸ்மாக் கடைகள், கள், பார் உட்பட அனைத்து மதுக்கடைகளும் , மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் அனைத்து கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது கலால் சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

1 More update

Next Story