பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு


பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
x
தினத்தந்தி 29 April 2025 2:00 PM IST (Updated: 29 April 2025 4:23 PM IST)
t-max-icont-min-icon

அமித்ஷாவை நேற்று நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று பிரதமரை சந்தித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதிலிருந்தே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று பகல் 1 மணியளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் வரை நீடித்தது.

இந்த சந்திப்பின்போது, வருகிற 2026 சட்டசபை தேர்தல் கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், தேர்தலை எதிர்கொள்வது, குறித்தும், கட்சியில் நிர்வாகிகள் நியமனம், பூத் கமிட்டியை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் தீவீர ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

1 More update

Next Story