நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை குத்திக்கொன்ற போலீஸ்காரர்


நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை குத்திக்கொன்ற போலீஸ்காரர்
x
தினத்தந்தி 19 Oct 2025 9:41 AM IST (Updated: 19 Oct 2025 9:44 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 13-ந்தேதி இரவு சந்தோஷ், காஷம்மாவின் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பைலஓங்கலா தாலுகா பெலாவடி கிராமத்தை சேர்ந்தவர் காஷம்மா நெல்லிகானி (வயது 34). இவர் சவதத்தியில் உள்ள கர்நாடக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். அதுபோல் காக்வாட் தாலுகா பனஜ்வாட் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் காம்ப்ளே (37).

இவர் போலீஸ்காரர் ஆவர். இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். வெவ்வேறு சாதியை சேர்ந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டினர். இதனால் திருமணம் செய்து சந்தோஷமாக வசித்து வந்தனர்.

திருமணமான சில மாதங்களிலேயே காஷம்மாவின் நடத்தையில் சந்தோசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கணவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவரை விட்டு பிரிந்து காஷம்மா சவதத்தியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். இருப்பினும் சந்தோஷ் தொடர்ந்து காஷம்மா வீட்டுக்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து காஷம்மா விவாகரத்து கோரி பைலஓங்கலா குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் கோர்ட்டு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் சந்தோஷ், காஷம்மாவின் வீட்டுக்கு சென்று சண்டையிடுவதை நிறுத்தவில்லை. அதுபோல் கடந்த 13-ந்தேதி இரவு சந்தோஷ், காஷம்மாவின் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார்.

அப்போது திடீரென்று அவர் கத்தியால் காஷம்மாவின் கழுத்து, வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் நிலை குலைந்த காஷம்மா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செத்தார். இதையடுத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அங்கிருந்து சந்தோஷ் தப்பிச் சென்றுவிட்டார். இந்த நிலையில் காஷம்மாவின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சவதத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு காஷம்மா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சவதத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தினரிடம் காஷம்மா உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விவாகரத்து பெற்ற நிலையிலும் காஷம்மாவுடன் அடிக்கடி சந்தோஷ் தகராறு செய்து வந்ததும், இந்த தகராறில் அவர் காஷம்மாவை கூர்மையான ஆயுதத்தால் 3 முறை குத்திக் கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சந்தோசை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story