வாரணாசி சென்ற ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய கும்பல்


வாரணாசி சென்ற ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய கும்பல்
x

குற்றவாளிகளை பிடிப்பதற்காக ரெயில்வே லைனை ஒட்டிய கிராமங்களில் ரெயில்வே போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பரேலி:

டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நோக்கி சென்ற காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி தாக்கினர். நேற்று முன்தினம் உத்தர பிரதேசத்தின் தனேட்டா ஹால்ட் ரெயில் நிலையத்தை அடைந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கல்வீச்சில் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.

இதுபற்றி பரேலி ரெயில்வே காவல் நிலைய பொறுப்பாளர் அஜித் பிரதாப் சிங் கூறுகையில், ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக, ரெயில்வே லைனை ஒட்டிய கிராமங்களில் ரெயில்வே போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர், என்றார்.


Next Story