மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தால், சமூகம் அழிந்துவிடும்- மோகன் பகவத்


மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தால், சமூகம் அழிந்துவிடும்- மோகன் பகவத்
x
தினத்தந்தி 2 Dec 2024 1:49 AM IST (Updated: 2 Dec 2024 7:33 AM IST)
t-max-icont-min-icon

பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மக்கள் தொகையை குறைந்து வருவது கவலை அளிப்பதாக பேசியிருக்கிறார்.

நாக்பூர்

நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், "ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். ஒரு சமூகத்தில் பிறப்பு விகிதம் 2.1க்கு கீழே குறையும்போது அந்த சமூகம் அழிவை சந்திக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் மக்கள் தொகை குறைந்து வருவதால் பல மொழி, கலாச்சாரமும் ஏற்கனவே மறைந்து விட்டன. 1998 அல்லது 2022ல் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் மக்கள்தொகை கொள்கையும் மொத்த பிறப்பு விகிதம் 2.1க்கு கீழே இருக்க கூடாது என்பதை தௌிவாக வலியுறுத்துகிறது.மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2.1க்கு கீழ் சென்றால், அந்த சமூகம் அழிந்து விடும். அதை வேறு யாரும் அழிக்க வேண்டாம். அது தானாகவே அழிந்து விடும். எனவே ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும்" என கூறினார்.


Next Story