குஜராத்தில் ரூ. 90 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம், பணம் பறிமுதல்

குஜராத் மாநில போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ரூ. 90 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
காந்திநகர்,
குஜராத் மாநில போலீசாருக்கு அகமதாபாத்தில் உள்ள பால்டி பகுதியில் அமைந்துள்ள அவிஷ்கர் அடுக்குமாடி கட்டிடத்தில் கடத்தல் தங்கம் மற்றும் பணம் மறைத்து வைக்கப்படிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் அந்த கட்டிடத்தில் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ. 90 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த தங்கம் மற்றும் பணத்தை மேக் ஷா மற்றும் அவரது தந்தை மகேந்திர ஷா ஆகியோர் மறைத்து வைத்தது தெரியவந்தது.
மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம் தற்போது அதன் மதிப்பை தீர்மானிக்க கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதில் பங்குச் சந்தை வர்த்தகம், பந்தயம் கட்டுதல் மற்றும் தங்கம் கடத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.