பாலியல் தொல்லைகள் குறித்து இதுவரை யார் மீதும் புகார் வரவில்லை: கேரள கவர்னர்


பாலியல் தொல்லைகள் குறித்து இதுவரை யார் மீதும் புகார் வரவில்லை: கேரள கவர்னர்
x
தினத்தந்தி 26 Aug 2024 5:00 PM GMT (Updated: 29 Aug 2024 6:37 AM GMT)

கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தாங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியதாவது:-

கேரள திரைத்துறை பாலியல் தொல்லைகள் தொடர்பாக இதுவரை யார் மீதும் புகார் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story