செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை 9-ந் தேதிக்கு தள்ளிவைப்பு


செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை 9-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
x

செந்தில் பாலாஜிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த மாதம் 9-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது.

புதுடெல்லி,

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.இதற்கிடையே அவர் மீதான ஊழல் வழக்குகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீ்ம் கோர்ட்டு, இந்த மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த மாதம் 9-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.


Next Story