வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் பள்ளிகள் திறப்பு


வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 2 Sept 2024 11:49 AM IST (Updated: 2 Sept 2024 1:31 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு புதிய நோட்டு புத்தகம் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின. நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ராணுவம் தொடர் மீட்புப்பணிகளில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் ஒரு மாதத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. முண்டகையில் பள்ளிகள் உருக்குலைந்த நிலையில் மேப்பாடி, ஏபிஜே ஹாலில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் வகுப்புகள் நடைபெறுகிறது.

மாநில கல்வி மந்திரி சிவன்குட்டி, மாணவர்களை 3 அரசுப்பேருந்துகளில் பள்ளிக்கு அழைத்துச்சென்றார். அங்கு மாணவர்களுக்கு புதிய நோட்டு புத்தகம் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.


Next Story