ஜார்கண்ட்: வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி முதல்வர் பலி

பள்ளி முதல்வர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள மஹிவாதாபர் நடுநிலை பள்ளியில் முதல்வராக இருந்தவர் சஞ்சய் குமார் தாஸ். பள்ளியிலிருந்து ஏதோ வேலைக்காக இரு சக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
இந்த தாக்குதலில் பலத்த காயங்களுடன் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர். அங்கு சஞ்சய் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சஞ்சய் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story