சபரிமலை சீசன்... பெங்களூரு-நிலக்கல் இடையே அரசு பஸ் சேவை


சபரிமலை சீசன்... பெங்களூரு-நிலக்கல் இடையே அரசு பஸ் சேவை
x
தினத்தந்தி 15 Nov 2024 3:38 AM IST (Updated: 15 Nov 2024 10:27 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை சீசனையொட்டி கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களூரு-நிலக்கல் இடையே அரசு பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சபரிமலை சீசனையொட்டி பக்தர்களின் வசதிக்காக கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் பெங்களூரு-நிலக்கல் (பம்பை-சபரிமலை) இடையே 'வால்வோ' அரசு பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி முதல் தினமும் மதியம் 1.50 மணிக்கு வால்வோ அரசு பஸ் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு நிலக்கல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நிலக்கல்லில் இருந்து வருகிற 29-ந்தேதி மாலை 6 மணிக்கு வால்வோ அரசு பஸ் புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தை வந்தடையும். இந்த வால்வோ பஸ்சில் டிக்கெட் கட்டணமாக ரூ.1,750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story